அஜித் குமாரின் துணிவு பட அடுத்த சர்ப்ரைஸ் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான அறிவிப்பு இதோ!

அஜித் குமாரின் துணிவு பட OST குறித்த அப்டேட்,ajith kumar in thunivu ost release update by ghibran | Galatta

தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் வலம் வரும் அஜித் குமார் அடுத்ததாக தனது AK62 திரைப்படத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்க்கிறார். இப்படத்தின் ரிலீசுக்கு பின்பான டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி & சந்தானம் உள்ளிட்ட பலர் முக்கியமான வேங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸானது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் வெளியிடாக அஜித்குமாரின் துணிவு மற்றும் தளபதி விஜயின் வாரிசு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கின்றன. பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக அஜித் குமாரின் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

துணிவு படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்ததாக அனைவரும் பாராட்டிய நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பின்னணி இசை (OST) ட்ராக்குகளையும் வெளியிட உள்ளதாக தற்போது ஜிப்ரான் அறிவித்துள்ளார். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 32 சவுண்ட் ட்ராக்குகளுடன் பயன்படுத்தாத ஒரு சர்ப்ரைஸ் ட்ராக்கும் விரைவில் வெளியிட உள்ளதாக ஜிப்ரான் தெரிவித்துள்ளார். ஜிப்ரானின் அந்த பதிவு மற்றும் மொத்த டிராக்குகளின் பட்டியல் இதோ…
 

தர்பார் பட நடிகர் சுனில் ஷெட்டிக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் KLராகுல்... கோலாகலமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இதோ!
சினிமா

தர்பார் பட நடிகர் சுனில் ஷெட்டிக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் KLராகுல்... கோலாகலமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இதோ!

ரிலீஸுக்கு ரெடியான ரெட் ஜெயன்ட் மூவீஸின் கலக்கலான அடுத்த  படைப்பு... பிக் பாஸ் கவினின் டாடா பட ஸ்பெஷல் அப்டேட்!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான ரெட் ஜெயன்ட் மூவீஸின் கலக்கலான அடுத்த  படைப்பு... பிக் பாஸ் கவினின் டாடா பட ஸ்பெஷல் அப்டேட்!

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம் - கவுண்டமணியின் ஃபேவரட் வசனத்தில் டைட்டில்! செம்ம அறிவிப்பு இதோ
சினிமா

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம் - கவுண்டமணியின் ஃபேவரட் வசனத்தில் டைட்டில்! செம்ம அறிவிப்பு இதோ