துணிவு படத்தை பார்த்து வங்கியில் கைவரிசை! – போலீசிடம் சிக்கிய இளைஞர் .. வைரலாகும் வீடியோ..

துணிவு படம் பார்த்து வங்கி கொள்ளை - Man robbery inspired by thunivu movie | Galatta

திண்டுக்கல் தாடிக் கொம்பு பகுதியில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இளைஞர் ஒருவர்  வாடிக்கையாளரை போல் நுழைந்து வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரித்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியாக உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அவர் மிளகாய் பொடி மற்றும் பெப்பர் ஸ்ப்ரே தூவி ஊழியர்களை பிடித்து கட்டிபோட்டுள்ளார். ஒரு ஊழியர் வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். பின் வங்கியில் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி கொள்ளையனை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின் காவல்துறையினர் விசாரணை நடத்தியது.

முதல் கட்ட விசாரணையில் கொள்ளையன் திண்டுகல் மாவட்டம் பேகம்பூர் பகுதியை சேர்ந்த கலீல் ரகுமான் (23). இவர் பணப்பற்றாக்குறை காரணமாகவும் வாழ்க்கை வெறுத்து போனதாலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார். மேலும் அஜித் நடித்து எச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்தேன் என்றும் மேலும் சில படங்களை பார்த்து விட்டு இதில் ஈடுபட்டதாகவும் கூறினார். கொள்ளையன் பயன்படுத்திய பொருட்களான பேப்பர் ஸ்ப்ரே, பிளாஸ்டிக் கயிறு, இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் கைமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் அதிகமாக நடமாகும் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியது திண்டுகல் மக்களிடியே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி 11 உலகளவில் வெளிவந்த படம் ‘துணிவு இப்படத்திற்கு உலகளவில் மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் 11 நாட்களை கடந்தும் துணிவு திரைப்படம் ஹவுஸ் புல்லே இருக்கின்றது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். துணிவு திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுப்ரீம் சுந்தர் சண்டை வடிவமைப்பு பெரிதளவு பேசப்பட்டு வருகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜீத் நடிப்பில் துணிவு திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் பெரும் எதிர்பார்ப்பு கொண்ட படங்களில் ஒன்று.  இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வங்கி கொள்ளையை மையப்படுத்தியும் வங்கியின் பின்புலம், மக்கள் ஏமாற்றத்தை பேசும் படமாக துணிவு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணை, விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் - தமிழ் திரையுலகினர் அஞ்சலி..
சினிமா

விசாரணை, விக்ரம் வேதா திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் - தமிழ் திரையுலகினர் அஞ்சலி..

சினிமா

"அஜித் சாருக்கு கதை இருக்கு.. 8 வருஷமாகியும் அவர Meet பண்ண முடியல" - பிரபல இயக்குனர் வேதனை..

Avengers திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய Avatar 2: வாழ்நாள் சாதனையை முறியடித்து வசூல் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

Avengers திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய Avatar 2: வாழ்நாள் சாதனையை முறியடித்து வசூல் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..