எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் குமார் - போனி கபூர் - H.வினோத் கூட்டணியில் துணிவு திரைப்படம் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளது.
அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்ற, நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ப துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக கொண்டாடப்படுகிறது.
பக்கா அதிரடி ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார். துணிவு படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நிலையில், அதிரடியான அந்த ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவராத அதிரடியான அந்த வீடியோ இதோ…
FIRST BLOCKBUSTER OF 2023
— raahul (@mynameisraahul) January 24, 2023
THUNIVU pic.twitter.com/rstwQJ4d3d