கனடாவில் மாஸ் காட்டும் விஜய் மக்கள் இயக்கம் - தளபதி விஜயை பாராட்டிய கனடா நாட்டு மேயர்.. வைரலாகும் வீடியோ இதோ..

விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா நாட்டு மேயர் - Canada mayor thanks to vijay makkal iyakkam | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் பல தசாப்தங்களாக ரசிகர்களை தனது படத்தின் மூலம் உற்சாகப்படுத்தி வருகிறார்.‌அதனாலே அவரது சிறப்பு மிக்க ரசிகர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் இருக்கின்றனர். மேலும் அவர் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் நற்பணி மன்றம் நடத்தி வருகிறார். இதன் மூலம் அவரது ரசிகர்கள் நேரடியாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். சேவை மட்டுமின்றி நேரடியாக அரசியல் களத்திலும் இறங்கி மக்கள் சேவை செய்து வருகின்றனர். மேலும்  விஜய் படம் வெளிவந்தால் சாதாரண ரசிகர்கள் செய்யும் வேலைகளை விட மக்களை நோக்கி விஜய் மக்கள் இயக்கம் செய்யும் சேவை அதிகம் கவனம் பெறுகின்றன.

விஜய் மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பல இடங்களில் பல சேவைகளை செய்து கவனம் பெற்று வருகின்றனர் குறிப்பாக கனடா நாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள் பல ஆண்டுகளாக சிறப்பு மிக்க வகையில் நலத்தொண்டுகளை செய்து தனித்து தெரிகின்றனர்.

இந்நிலையில் கனடா தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கனடாவின் பர்லிங்டன்னில் உள்ள கனடா இரத்த சேவைகள் முகாமில் இரத்ததானம் வழங்கினார்கள். இதனையடுத்து கனடா நாட்டைச் சேர்ந்த பர்லிங்கடன் நகர மேயர் மரியன் மீட் வார்டு தளபதி விஜய் அவர்களையும் விஜய் மக்கள் இயக்கத்தையும் பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்,

“இந்திய நடிகர் விஜய் அவர்களின் கனடா விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த ரசிகர்கள் கனடா நாட்டின் பர்லிங்கடன் நகரில் இரத்த தானம், உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது பாராட்டுக்குரியது. எனது நன்றிகளையும், வாழ்த்தினையும் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.இது மேலும் தொடர வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றானர்.  

விஜய் நடித்து வம்சி இயக்கிய வாரிசு திரைப்படம் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள நிலையிலம் படம் வெளியாகி 11 நாள் ஆகிய நிலையில் உலகளவில் வாரிசு திரைப்படம் ரூ 250 கோடி வசூலித்ததாக நேற்று அப்படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். தற்போது கனடா மேயரின் வீடியோ வைரலாகி வருகிறது, தொடர்ந்து இரண்டாவது நாளாக இணையத்தில் விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர்.

சினிமா

"அஜித் சாருக்கு கதை இருக்கு.. 8 வருஷமாகியும் அவர Meet பண்ண முடியல" - பிரபல இயக்குனர் வேதனை..

Avengers திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய Avatar 2: வாழ்நாள் சாதனையை முறியடித்து வசூல் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

Avengers திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய Avatar 2: வாழ்நாள் சாதனையை முறியடித்து வசூல் சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!
சினிமா

பிக் பாஸ் 6 முடிவுக்கு வரும் நிலையில் குக் வித் கோமாளி telecast date – அட்டகாசமான புது டீசர்!