காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது,இந்த படத்தினை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்,ஆனால் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமானது.

இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.OTT-யில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.மேலும் இந்த படத்தை பல மொழிகளை சேர்ந்த நடிகர்களும் பாராட்டி வருகின்றனர்.ரசிகர்கள் சிலர் இந்த படத்தை திரையரங்குகளில் காணமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த படம் சில படவிழாக்களில் செலக்ட் ஆகி சமீபத்தில் சாதனை புடைத்திருந்தது.தற்போது இந்த படம் பொங்கலை ஒட்டி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.பொங்கல் விருந்தாக இந்த படம் வெளியாவதை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

A post shared by Satellite Rights Tamil (SRT)✨ (@satelliterightstamizh)