ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்து வந்தனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன முதலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமார் திடிரென்று மாற்றப்பட்டார்.இதனை தொடர்ந்து இந்த தொடரின் நாயகன் கார்த்திக் தொடரில் இருந்து விலகினார்.இப்படி தொடரில் சில பெரிய மாற்றங்கள் நடக்க ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.செம்பருத்தியில் இருந்து விலகினாலும் கார்த்திக்குக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே இருந்தது.சீரியலில் இருந்து விலகிய பிறகு அமைதியாக இருந்த கார்த்திக் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.கிங் என்ற வாசகம் போடப்பட்ட டீ-ஷர்ட் உடன் இவர் போட்டோவை பதிவிட்டுள்ளார்.பல நாட்களாக கார்த்திக்கிடம் இருந்து ஒரு அப்டேட்டை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

A post shared by K A R T H I K R A J🌙☀️ (@iamkarthikraj)