தென்னிந்தியாவில் தன் படங்கள் மூலம் அதிகம் பேசப்படும் கதாநாயகியாக இருந்து வருபவர் சமந்தா. வித்யாசமான கதைக்களத்துடன், வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்து வரும் சமந்தா தமிழில் பானா காத்தாடி படம் மூலம் கதாநயாகியாக அறிமுகமாகினார். ராஜ மௌலியின் நான் ஈ படம் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் மூலம் பிரபலமானார்.  அதன்பின் நீதானே என் பொன் வசந்தம், கத்தி, அஞ்சான்,தெறி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க தொடங்கினார்.  தொடர் வெற்றி படங்கள் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகரானார் சமந்தா.

தென்னிந்தியாவில் மட்டுமல்ல  கடந்த 2019 ல் இந்தி தொடராக வெளிவந்த ‘தி பேமிலி மேன்’ திரைப்படத்தில் மூலம் வட இந்தியாவிலும் கவனம் பெற்றார் சமந்தா. அதன் பின் பான் இந்திய படமான புஷ்பா படத்தின் சிறப்பு பாடலில் தோன்றி அனைத்து தரப்பு மக்களிடமும் பரிச்சயம் அடைந்தார். யு டர்ன் , ஒ பேபி போன்ற படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடித்து கவர்ந்தார் அதன்பின் கதாநாயகி மையப்படுத்திய படங்களிலும் நடித்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த யசோதா திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

'யசோதா' படத்திற்கு பிறகு சமந்தா, 'ருத்ரமாதேவி' திரைப்படத்தின் இயக்குனர் குணசேகர் எழுதி இயக்கும் சாகுந்தலம் படத்தில் நடித்தார். சரித்திர கதையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரலைர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.  

அதில் கலந்து கொண்ட சமந்தாவிற்கு ஆர்வரத்துடனான வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் குணசேகரன், இந்த படத்தில் உண்மையான ஹீரோ சமந்தா தான் என்று அவரை புகழ்ந்தும் அவரது உழைப்பை பாராட்டியும் பேசினார். இயக்குனர் பேச்சை கேட்டு உருக்கமான சமந்தா மேடையில் உடைந்து அழ தொடங்கினார்.  சமந்தாவின் எமோஷன் அவரது ரசிகர்களையும் மனமுடைய செய்தது.

அதன்பின் பேசிய சமந்தா, “ இந்த தருணத்திற்காக நான் பல நாட்களாக காத்திருந்தேன். எதிர்பார்த்தபடி படம் வெளியாக வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பமாக இருக்கின்றது. என்றோ ஒரு நேரத்தில் தான் சில மேஜிக் நடக்கும் அப்படிதான் எனக்கு இந்த சாகுந்தலம் திரைப்படம், எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என்று மனம் உருகி பேசினார் சமந்தா. வரும் பிப்ரவரி 17 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 3D யில் சாகுந்தலம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.