பிரபல தனியார் தொண்டு நிறுவனமான யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் மக்களுக்கு சுற்றுசூழலை பாதிக்கும் கழிவுகளை அகற்றுவது,உணவற்றவர்களுக்கு உணவு வழங்குவது என பல உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள திருக்காஞ்சியில் 60 முதிய தம்பதிகளுக்கு மணிவிழா நடத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.யுவர் பேக்கர்ஸ் நிறுவன தலைவர் கிருஷ்ணராஜு முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்,புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி,சபாநாயகர் ஏம்பலம்செல்வம்,அமைச்சர்கள் அமைச்சர்கள் நமச்சிவாயம்,தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

நாளை 21 ஆகஸ்ட் அன்று திருக்காஞ்சி ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.இத்துடன் சங்கரா பரணி ஆற்றங்கரையில் 64 அடி உயர சிவன் திரு உருவ சிலை அடிக்கல் நாட்டு விழா,5000 பேருக்கு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் யுவர் பேக்கர்ஸ் அழைக்கின்றனர்.