அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவிருக்கின்றது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான  இப்படத்தின் டிரலைர் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதனையடுத்து ஜனவரி 11 ம் தேதி வெளியாகவிருக்கும் துணிவு திரைப்படத்தின் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகவிருக்கும் துணிவு படத்தின் இறுதிகட்ட விளம்பர பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் எச் வினோத் துணிவு படம் குறித்தும் தன் திரைப்பயணம் மற்றும் கடந்து வந்த விமர்சனங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் பகிர்ந்தார். அதில் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றுவது குறித்த கேள்விக்கு,

அதில் பேசிய அவர், “பெரிய நட்சத்திரங்களுடன் வேலை பார்ப்பது வசதியாக உள்ளது. அதே நேரத்தில் பிரச்சனைகளும் அதில் உள்ளது. சிறிய படங்களில் நூறு விஷயங்களில் இரண்டு மூன்று விஷயங்கள் மக்களிடம் போய் சேரும். ஆனால் பெரிய நட்சத்திரங்கள் படங்களில் உள்ள சின்ன விஷயங்கள் கூட நூறு விஷயமாக போய் சேர கூடிய வாய்ப்பு உள்ளது. அது தவறாக போய் முடியவும் வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு நான் ஒரு வசனத்தையோ கட்சியையோ படத்தில் வைத்தால் அது நான் வைத்தது என்று போய் சேராது. அஜித் சார் சொல்லி நான் செய்ததாகதான் சித்தரிக்கப்படும். ஒரு பெரிய நட்சத்திரம் இறங்கி வந்தாலும் அதை உலகம் ஏற்பதில்லை. மக்கள் அவர்களை கூர்ந்து கவனிப்பதால் அந்த பெரிய நட்சத்திரம் என்ன செய்தாலும் சிக்கலில் தான் போய் முடிகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் நாம் பேசும் அல்லது நம் எண்ணவோட்டத்தை பரவலாக பேசுகின்றனர். ஒரு விவாத பொருளாக மாற்றுகின்றனர். ஒரு நல்ல விஷயத்தை பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து படத்தில் வைத்தால் அது சமூக ரீதியான தாக்கத்தை  தருக்கிறது என்று நான் நம்புகிறேன்”. என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற  பல தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட எச் வினோத் அவர்களின் முழு விடியோ