ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாக்கள் ஏதோ ஒரு வரையரையருக்கபட்ட பட்டியலில் இடம் பெறவும் அல்லது அங்கீகாரத்தை நோக்கியும் ஓடிக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக சிறந்த படங்கள், பாடல்கள், நடிகர் என்று பட்டியல்கள், விருதுகள் வரிசை  அதிகம். அப்படி பட்டியலிடும் போது தனக்கு பிடித்த படங்கள் அல்லது தனது மனதிற்கு நெருக்கமான மனிதர்கள் அதில் இடம் பெறுவார்களா என்ற ஆவல் ரசிகர்களிடம் சமீபத்தில் இருந்து வருகிறது. அப்படி ஆண்டு தோறும் அந்த ஆண்டில் இறுதியிலோ தொடக்கத்திலோ பல பொழுதுபோக்கு பக்கங்கள் தங்கள் கணிப்பையும் அல்லது புள்ளி விவரங்களையும் வெளியிடுவதுண்டு.

அதன்படி உலகளவில் தலைசிறந்த பட்டியலிடும் தளமாக IMDb இருந்து வருகிறது. உலகாளவிய படங்களை அலசி, ரசிகர்களின் கணிப்பு தேடுதல் மற்றும் விமர்சகர்களின் கூற்றின் அடிப்படையில் ஒவ்வொரு படங்களுக்கும் மதிப்பு வழங்கி அதை பட்டியலிடும் வழக்கம் இந்த IMDb கொண்டுள்ளது.

அதன் படி IMDb தளம், கடந்த ஆண்டு ரசிகர்களிடம் அதிகம் பிரபலமடைந்த மற்றும் அதிகம் தேடப்பட்டதன் அடிப்படையில் என்ற கணக்கில் கொண்டு, 'அதிகம் எதிர்பார்க்கப்படும் 20 இந்திய படங்கள்' என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து பொங்கலையொட்டி ஜனவரி 11 அன்று வெளிவரவிருக்கும் ‘வாரிசு’ திரைப்படம்  6 வது இடத்தில் வகிக்கின்றது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்ள்ளி இயக்கத்தில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் அறிவிப்பிலிருந்து நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது.  மேலும் படத்தின் பாடல்கள், டிரைலர் முன்னதாக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படம் 8 வது இடத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த 'விக்ரம்' படத்தை இயக்கி அந்த படத்தின் மூலம் LCU என்ற கதை உலகத்தை அறிமுக படுத்தியுள்ளார். அதில் ஏற்கனவே கமல், சூர்யா,கார்த்தி, பாஹத் பாசில் என்று உச்சநட்சத்திரங்களின் கூட்டணி உள்ளது. இதில் விஜய் இணையவுள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியது. அதன்படி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. அனிரூத் இசையில் ஏற்கனவே சில பாடல்கள் முடிந்த நிலையில் சில காட்சிகள் படமாக்கபட்டுவிட்டதாகவும் வரும் 2023 இறுதியில் இந்த படம் வெளியாகும் என தகவல் வெளியாகிவுள்ளது. 

2023 is off to a great start! ✨⚡Here is the list of the Most Anticipated Indian Movies of 2023. 🌻

Which release are you looking forward to the most? 🤔 pic.twitter.com/00Xwr4HQ2b

— IMDb India (@IMDb_in) January 9, 2023

உலகளவில் தணிக்கை பட்டியலை வெளியிடும் IMDb தளத்தில் விஜயின் படங்கள் முதல் பத்து இடங்களின் வரிசையில் உள்ளது என்ற செய்தி ரசிகர்களிடம் உற்சாகத்தை வழங்கியுள்ளது. அதன்படி விஜய் ரசிகர்கள் IMDb தளம் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் துணிவு 13 வது இடத்திலும்  கமல் ஹாசன் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகம் 16 வது இடத்திலும் சூர்யா இயக்குனர்  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜல்லிக்கட்டு திரைப்படம் 17 இடத்திலும் வகிக்கின்றது. இந்தியளவில் தமிழ் படங்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதற்கான சான்றாக உள்ள இந்த பட்டியலிட்ட பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்,