தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் வலம் வரும் நடிகர் பிரபாஸ் கடைசியாக வெளிவந்த ராதேஷ்யாம் திரைப்படத்தைத் தொடர்ந்து கே ஜி எஃப் திரைப்படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாக தயாராகி வருகிறது. அடுத்ததாக பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ், ப்ராஜக்ட் கே எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ராமாயணத்தை கதைக்களமாகக் கொண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிப்ருஷ். ராமராக பிரபாஸ் நடிக்கும் ஆதிப்ருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கிறார். ஹனுமான் கதாபாத்திரத்தில் தேவ்தத்தா நாகே நடிக்கிறார். 

T-Series Films & Retrophiles தயாரிப்பில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் சாச்செட்-பரம்பரா இசையமைத்துள்ள ஆதிப்ருஷ் படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

|| Aarambh ||

Join us as we embark on a magical journey ✨ On the Sarayu River Bank in Ayodhya, UP! #AdipurushInAyodhya

Unveil the first poster and teaser of our film with us on Oct. 2 at 7:11 PM! 🫶#AdipurushTeaser pic.twitter.com/FztflExOxh

— T-Series (@TSeries) September 30, 2022