தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிரிஷ் சரவணன், இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த மெட்ரோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இத்திரைப்படத்திலிருந்து மெட்ரோ சிரஷ் அழைக்கப்படுகிறார். செயின் ஸ்னாட்சிங்கை மையப்படுத்தி வெளிவந்த மெட்ரோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடித்து வெளிவந்த ராஜா ரங்குஸ்கி திரைப்படமும் பலரது கவனத்தை ஈர்த்தது. கடைசியாக இயக்குனர் சர்ஜுன்.KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் உடன் இணைந்து மெட்ரோ சிரிஷ் நடித்த பிளட் மணி திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஜீ5 OTT தளத்தில் ரிலீஸானது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் M.ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடித்துள்ள திரைப்படம் பிஸ்தா. மிருதுலா முரளி கதாநாயகியாக நடிக்க, அருந்ததி நாயர், சதீஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிஸ்தா படத்தை ஒன் மேன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

M.விஜய் ஒளிப்பதிவில், M.ரமேஷ் பாரதி படத்தொகுப்பு செய்துள்ள, பிஸ்தா படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பிஸ்தா திரைப்படம் தரண் குமாருக்கு 25-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிஸ்தா திரைப்படத்திலிருந்து என்ன கொல்ல வந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் இதோ…