பல சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தன் சினிமா பணிகளை தொடங்கியுள்ளார். அந்த வகையில் முதல் முறை ஹிந்தியில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார்.

முன்னதாக மாயா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் விரைவில் ரிலீசாக தயாராகிவரும் நிலையில், பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள கோல்டு திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து காட்ஃபாதர் திரைப்படத்தை தயாரித்துள்ளன.
 
சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் S.தமன் இசையமைக்கும் காட்ஃபாதர் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் காட்ஃபாதர் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…