ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மேல் செல்வம் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வரும் நிலையில்,ரிலீசுக்கு பின் பொன்னியின் செல்வன் திரைப்படம் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின், சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் பிரபு தன் கதாபாத்திரத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை த்ரிஷா இயக்குனர் மணிரத்னத்துடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தையும் தனது கதாபாத்திரத்தின் புதிய புகைப்படம் ஒன்றையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரண்டாகும் இந்த புகைப்படங்கள் இதோ…

 

Kundavai and her maker 👑
Thank you Mani sir for it all🙏🏻
See you in the theatres.
30.9.2022❤️ pic.twitter.com/dK24ri6zLL

— Kundavai (@trishtrashers) September 29, 2022

Happy to have played Dear sir Mani Rathnam’s Parthibendran Pallavan in his dream project #PonniyinSelvan Do watch & enjoy the 1st of 2 parts from 30th September 2022 #PS1 🤘😊 pic.twitter.com/GBt5pirkkS

— Vikram Prabhu (@iamVikramPrabhu) September 29, 2022