கன்னடத்தில் ஒளிபரப்பான Avanu Matte Shravani என்ற சூப்பர்ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி.இவருக்கு இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இறுதியில் இணைந்து தமிழில் தனது என்ட்ரியை கொடுத்தார் சைத்ரா ரெட்டி.

இதனை அடுத்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடரில் நடித்து அசத்தினார்.இந்த தொடரின் முக்கிய வில்லியான ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் சைத்ரா ரெட்டி.1000 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமான இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் சைத்ரா ரெட்டி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் வெளியான வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் சைத்ரா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.அஜித்தை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகருடன் இவர் நடித்ததற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.