இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக சிறந்த நடிகையாகவும் திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாணிக் காயிதம் & சர்க்காரு வாரி பாட்டா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அடுத்ததாக மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைபுபுயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கில் வேதாளம் ரீமேக்கான  போலா ஷங்கர் படத்திலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து மலையாளத்தில் நடித்துள்ள வாஷி திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கியுள்ள வாஷி திரைப்படத்தை 
ஜி.சுரேஷ் குமார் நிறுவனம் சார்பில் மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ள வாஷி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  முன்னதாக வெளிவந்த யாதொன்னும் பரயாதே பாடல் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இந்நிலையில் வாஷி படத்திலிருந்து தற்போது ரிதுராகம் வீடியோ பாடல் வெளியானது. அசத்தலான அந்த வீடியோ பாடல் இதோ…