“பேரக்குழந்தை ஆசை..” மூத்த மருமகளை கர்ப்பமாக்க 2 இளைய மகன்களை அனுப்பி பலாத்காரம் செய்ய வைத்த மாமியார்!

“பேரக்குழந்தை ஆசை..” மூத்த மருமகளை கர்ப்பமாக்க 2 இளைய மகன்களை அனுப்பி பலாத்காரம் செய்ய வைத்த மாமியார்! - Daily news

பேரக்குழந்தை வேண்டும் என்கிற ஆசையில், நீண்ட நாட்களாக கருவுறாமல் இருந்த மூத்த மருமகளை கர்ப்பமாக்க, 2 இளைய மகன்களை அனுப்பி பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த மாமியாரால் கடும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் போல, இந்த கொடூர சம்பவமும் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

“இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக” கடந்த ஆண்டு அறிக்கை ஒன்று வெளியானது.

அத்துடன், “இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக”, நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த கூற்றை உண்மையாக்கும் விதமாகவே, இந்தியாவில் கொடூரமான பாலியல் குற்றங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இந்த பெண்ணுக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. 

அதாவது, குறிப்பிட்ட அந்த குடும்பத்தில் மொத்தம் 3 பேர் அண்ணன் தம்பி உள்ளனர். இதில், அந்த குடும்பத்தினர் மூத்த மகனை தான், குறிப்பிட்ட அந்த பெண், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். 

ஆனால், திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்காத நிலையில், அந்த பெண்ணின் மாமியாருக்கு பேரக்குழந்தையை தூக்கி கொஞ்ச வேண்டும் என்கிற ஆசையும் இருந்திருக்கிறது. இது தொடர்பாக தனது மருகமளை அந்த மாமியார் அடிக்கடி குத்திக்காட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்.

இப்படியாக, பேரக்குழந்தையை கொஞ்ச வேண்டும் என்கிற ஆசை ஒரு கட்டத்தில் அதிகமானதால், தனது மருமகளை எப்படியாகவது கர்ப்பம் தரிக்க செய்து விட வேண்டும் என்று, யோசித்து இருக்கிறார். 

அப்போது தான், ஒரு விபரீதமான முடிவையும் அந்த மாமியார் எடுத்திருக்கிறார்.

அதன்படி, தனது மூத்த மகன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து, தனது 2 இளைய மகன்களையும் அந்த மருகளின் அறைக்குள் அனுப்பி, “அந்த மருமகளை பலாத்காரம் செய்யும் படி” அவர் கூறியிருக்கிறார். 

அதன்படியே, அந்த இரு இளைய மகன்களும், தனது அண்ணனின் மனைவி என்று பார்க்காமல், தங்களது அண்ணியை மைத்துனர்களான இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது இரு மைத்துனர்கள் மீதும், மாமியார் மீதும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் இரு மைத்துனர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பேரன் வேண்டும் என்கிற ஆசையில், மாமியாரே தனது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய தனது இரு இளைய மகன்களை அனுப்பி வைத்த சம்பவம், உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment