இந்திய திரையுலகில் மிக முக்கிய நடிகராக விளங்கும் நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15 தேதி குறிப்பிட்ட திரையரங்குகளிலும் ஜூலை 22-ம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸிலும் ரிலீஸாகவுள்ளது.

மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி (SIR) படத்தில் நடித்து வரும் தனுஷ்  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மீண்டும் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தில் நடிகை இந்துஜா, பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  சில வாரங்களுக்கு முன்பு நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…