ஏற்கனவே 3 திருமணம்.. குழந்தை இல்லாததால் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற பள்ளி வேன் ஓட்டுநர்!

ஏற்கனவே 3 திருமணம்.. குழந்தை இல்லாததால் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற பள்ளி வேன் ஓட்டுநர்! - Daily news

ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து, இது வரை யாருக்கும் குழந்தை பிறக்காத நிலையில், தான் ஓட்டுநராக பணியாற்றிய பள்ளியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திச் சென்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்து உள்ள பாப்பம்பாடியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அஜித் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இப்படியான சூழலில் தான், அந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த 21 ஆம் தேதி அன்று மாயமாகி உள்ளார்.

அதாவது, அந்தப் பள்ளி வாகன ஓட்டுநர் கார்த்திக் உதவியுடன், அதே பள்ளியில் ஓட்டுநராக உள்ள அஜித் என்பவர், ஆசை வார்த்தை கூறி அவருடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த, அந்த மாணவியின் பெற்றோர்கள் அங்குள்ள அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து அந்த பள்ளியின் மற்றொரு ஓட்டுனர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, இந்த பள்ளி மாணவியின் கடத்தலுக்கு உதவியாக இருந்த ஓட்டுனர் கார்த்திகை, கடந்த 31 ஆம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். 

அதன் தொடர்ச்சியாகவே “சேலம், ஏற்காடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் அஜித்தை தேடி வந்த நிலையில், பெங்களூருவில் அரூர் உட்கோட்ட குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரிடம் எப்படியோ அஜித் பிடிபட்ட நிலையில், அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அஜித்திடம் இருந்து கடத்தப்பட்ட அந்த 11 ஆம் வகுப்பு மாணவியை மீட்ட போலீசார், அவர்கள் இருவரையும் அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய இந்த விசாரணையில், “ஓட்டுநர் அஜித், ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தது” தெரிய வந்தது. 

ஆனால், 3 மனைவிகள் இருந்தாலும், அவர்கள் யாருக்கும் இதுவரை குழந்தைகள் இல்லை” என்பதும் தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அஜித்தை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment