“ஏ வரியா..” இரவில் மப்டியில் இருந்த பெண் போலீசை அழைத்து வம்பிழுத்த ரோமியோ!

“ஏ வரியா..” இரவில் மப்டியில் இருந்த பெண் போலீசை அழைத்து வம்பிழுத்த ரோமியோ! - Daily news

இரவில் மப்டியில் இருந்த பெண் போலீசை “ஏ வரியா..” என்று, பாலியல் ரீதியாக சைகை காட்டி அழைத்த ரோமியோ உட்பட இருவரை போலீசார் அதிரடியாக தட்டி தூக்கி உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள பெண் போலீசாரிடம் தான், இரவு நேரத்தில் ரோமியோ ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி அத்து மீறி இருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலு பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிலி என்ற பெண், தாம்பரம் கானத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். 

இந்த சூழலில் தான், தாம்பரம் உதவி கமிஷ்னர் ரவிக்குமாரின் தாயார், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மத்திய கைலாஷ் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை, மருத்துவமனையில் பார்த்துக்கொள்ளவதற்காக,  உதவி கமிஷ்னர் ரவிக்குமாரின் வாய்மொழி உத்தரவின் பேரில், பெண் போலீசான ஷர்மிலா, அந்த மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறார். 

இதனையடுத்து, தனது பணியை முடித்துக்கொண்டு மப்டி உடையில் வந்த பெண் போலீஸ் ஷர்மிலா, அடுத்த ஷிப்ட் வேலைக்கு ஆயுதப்படை காவலர் சரவணனுக்காக நேற்று இரவு மருத்துவமனை வாசலில் வந்து காத்துக்கொண்டு இருந்து உள்ளார். 

அப்போது, அந்த வழியாக வந்த காதல் ரோமியோ ஒருவன், “ஏ வரியா..” என்று, அழைக்க, அந்த பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “ஏ உன்னைத் தான் வரியா’’ என அழைத்து, ஆபாசமாக சைகை காட்டி உள்ளார். 

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் போலீஸ் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், சற்று பயந்து மீண்டும் மருத்துவமனைக்குள் சென்ற அந்த பெண் போலீஸ் ஷர்மிளா, சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் வாசலுக்கு வந்து உள்ளார். 

ஆனால், அங்கிருந்து செல்லாத அந்த காதல் ரோமியோ, மீண்டும் மீண்டும் “வரியா..” என்று, ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. 

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த பெண் போலீஸ், “யாரிடம் எப்படி பேசுவதென்று உனக்குத் தெரியாதா? எல்லாரிடமும் இப்படித்தான் பேசுவியா?” என்று, சண்டை போட்டு உள்ளார். 

அந்த நேரம் பார்த்து, அடுத்த ஷுப்டுக்கு அங்கு வந்த போலீசார் சரவணனிடம், இந்த பெண் போலீஸ் நடந்ததை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, போலீசான சரவணன், அந்த காதல் ரோமியோவை எச்சரித்து உள்ளார். 

அத்துடன், “சைகை மூலம் பெண் போலீசிடம் ஆபாசமாக பேசியதற்கு  மன்னிப்பு கேட்குப்படி” அவர் கூறியிருக்கிறார். 

இதற்கு, விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்த அந்த இளைஞர், “நான் அப்படித்தான் அழைப்பேன்” என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. 

பின்னர், அந்த காதல் ரோமியோ, தனது சக நண்பர்களுக்கும் போன் செய்த நிலையில், அங்கு வந்த அவனது கூட்டாளி ஒருவன், அந்த காதல் ரோமியோ உடன் கூட்டு சேர்ந்து அந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த போலீஸ், அந்த இளைஞர் வந்த பைக் சாவியையும், செல்போனையும் பிடிங்கி வைத்துக்கொண்டு, மத்திய கைலாஷ் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, இது பற்றி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார, விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “கலிக்குன்றத்தை சேர்ந்த 29 வயதான விக்னேஷ் தான், அந்த காதல் ரோமியோ என்பது” தெரிய வந்தது. 

பின்னர், இந்த குற்றத்தை விக்னேஷ் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீதும் அவனது கூட்டாளி மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதே நேரத்தில், “தனது தாயாரை மருத்துவமனையில் பார்த்து கொள்வதற்காக காவலர்களை பணி அமர்த்திய உதவி ஆணையர் ரவிக்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனிடையே, பெண் போலீசாருக்கே இரவு நேரத்தில் பாலியல் தொல்லைக் கொடுக்கும் விதமாக சைகை காட்டிய சம்பவம், சக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment