மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் சமாதியில் இன்று  நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

udhaiகன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதில் புனீத் ராஜ்குமார் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்து பின்பு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், ரசிகர்களும் , புனீத்  ராஜ்குமார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் . இருப்பினும் தமிழ் திரையுலகத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி, ஆகியோர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தினார்கள் பின்னர் கடந்த வாரம், நடிகர் சூர்யா புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, கண்ணீருடன் அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிலையில் அவர்களை தொடர்ந்து இன்று பெங்களூரில்  உதயநிதி ஸ்டாலின் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

 அதனை தொடர்ந்து புனீத்  ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின்  ஆறுதல் கூறினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், புனீத்  ராஜ்குமார் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  . பெரியவர் ராஜ்குமார் உயிரோடு இருந்த காலகட்டத்தில் எனது தாத்தா கருணாநிதியிடம் மிகுந்த நட்பு பாராட்டினார். எனது தாத்தா கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். என்னுடைய தந்தையார் மட்டுமல்லாது என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தாருக்கும் மிகவும் நெருக்கமான குடும்பமாக இருந்தார்கள். இந்த நேரத்தில் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து தலைவர் சார்பாகவும் எங்களுடைய குடும்பத்தின் சார்பாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம் என்று  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.