கனமழை காரணமாக  தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

rnraviவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவிட்டுள்ளது . டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 3 நாட்களுக்கு கனழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதை தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது .

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும்  நிலையில் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. சென்னையில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது  இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து மூன்றாவது நாளாக, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன், இன்று நேரில் ஆய்வு செய்தார்.


இந்நிலையில் கனமழை தொடர்வதால் அத்தியாவசியமின்றி வெளியே யாரும்  வர வேண்டாம் என தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். 

இது குறித்து ஆளுநர் தனது  ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது , இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய தேவையின்றி  நடமாட்டத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.