தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ஃபேவரட் இசையமைப்பாளராக வலம் வரும் ஜீவி பிரகாஷ்குமார் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இடிமுழக்கம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜீவி பிரகாஷ் குமார் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதி மாறன் இயக்கி வருகிறார். மேலும் ஜீவி பிரகாஷ் குமாரின் நடிப்பில் பேச்சுலர் மற்றும் காதலிக்க யாரும் இல்லை ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் கொரோனா இடைவெளிக்கு பிறகு ரிலீசுக்கு தயாராகி வருகிறது.க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ள ஜெயில் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

 ஜீவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக அபர்ணிதி நடிக்க, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்துள்ள ஜெயில் படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெயில் திரைப்படத்திலிருந்து நகரோடி பாடல் இன்று வெளியானது. தெருக்குரல் அறிவின் வரிகளில் ஜீவி, அறிவு, அனன்யா பட் இணைந்து பாட, சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் வெளிவந்துள்ள அதிரடியான நகரோடி பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.