தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது சிலம்பரசனின் மாநாடு திரைப்படம் .இயக்குனர் வெங்கட்பிரபு எழுதி இயக்கியுள்ள மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார். 

சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ள மாநாடு படத்தில் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார்.ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் பிரவீன்.K.L. படத்தொகுப்பு செய்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் அதிரடியான புதிய அறிவிப்புகள் இன்று வெளியானது. மாநாடு படத்தின் புதிய ரிலீஸ் டிரெய்லர் தயாராகி வருவதாக படத்தொகுப்பாளர் பிரவீன்.K.L. தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு பட இசை வெளியீடு நடைபெற உள்ளதாகவும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.