மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது பீஸ்ட் திரைப்படம். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

மேலும் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், VTV கணேஷ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலான வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். தளபதியின் மாஸ்டர் மற்றும் நெல்சனின் டாக்டர் படங்களுக்கு இசையமைத்த ராக்ஸ்டார் அனிருத் பீஸ்ட் படத்திற்கும் இசையமைக்கிறார்.

அதிரடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றி வருகின்றனர். பல கட்டங்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் 80 % படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு(2022) ஏப்ரலில் பீஸ்ட் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பீஸ்ட் பட ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பீஸ்ட் படப்பிடிப்பில் அதிநவீன கேமரா சாதனங்களையும் அதிரடி காட்சிகளுக்கு என்று பிரத்யேகமான கேமரா ரிக்களையும் பீஸ்ட் படத்திற்காக தற்போது பயன்படுத்தி வவருவதாக தெரிவித்துள்ளார்.எனவே தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு VISUAL ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது  

மேலும் ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார் மனோஜ் பரமஹம்சா. அந்த புகைப்படங்கள் இதோ…