தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று தொடக்கத்திற்கு முன்பு திரையரங்குகளில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம்  ஓ மை கடவுளே. நடிகர்கள் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஓ மை கடவுளே படத்தில் கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

அழகான ரொமான்டிக் ஃபேன்டசி திரைப்படமாக வெளிவந்த ஓ மை கடவுளே  திரைப்படத்தை இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கினார். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் ஹிட்டித்தது. இந்நிலையில் தமிழில் வெற்றி பெற்ற ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் ஓரி தேவுடா என ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பி வி பி சினிமா மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ஓரி தேவுடா படத்தை இயக்குனர் அஸ்வின் மாரிமுத்து இயக்கியுள்ளார். மேலும் தமிழில் இசையமைத்த லியோன் ஜேம்ஸ் மற்றும்  ஒளிப்பதிவு செய்த விது அய்யனா-வுமே தெலுங்கிலும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் நடிகர்கள் விஸ்வாக் சென் மற்றும் மிதிலா பல்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஓரி தேவுடா படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. கலக்கலான ஓ மை கடவுளே ரீமேக் ஓரி தேவுடா டைட்டில்  மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.