சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த சிறுவனிடம் டீ கடையில் அமர்ந்து ஆன்லைன் கல்வி குறித்து கேட்டறிந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்றாட கட்சிப் பணிகள் மற்றும் அலுவல் பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது சைக்கிள் பயணம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை பேனிகாத்து வருகிறார்.

இதனால், தொடர்ச்சியாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதும், பொது இடங்களில் சைக்கிள் பயணம் செல்வதும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அத்துடன், இப்படியான பயணங்களின் போது, அந்த சாலையில் செல்லும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்துகொள்வதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், தமிழக சட்டமன்றம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார்.

அப்போது, முதலமைச்சர் சைக்கிளிங் சென்ற வழியில் டீக்கடை ஒன்றில் அமர்ந்து டீ குடித்து சற்று இளைப்பாறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து பேசினார்.

முக்கியமாக, அந்த சிறுவனிடம் பேசிய முதல்வர், “ஆன்லைனில் படிக்கிறாயா? எந்த பள்ளியில் படிக்கிறாய் ?அந்த பள்ளி எங்கு இருக்கிறது?” என்று, படிப்பு சார்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார்.

அதற்கு அந்த சிறுவன், “கோவளத்தில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன்” என்று, பதில் அளித்திருக்கிறார். 

அத்துடன், “ஆன்லைனில் படிப்பது புரிகிறதா?” என்றும், முதலமைச்சர் அந்த சிறுவனிடம் கேள்வி எழுப்பினார். 

இந்த நிலையில், முதலமைச்சர் டீ கடையில் அமர்ந்து ஆன்லைன் கல்வி குறித்து சிறுவனிடம் பேசிய காட்சிகள், வீடியோவாக தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.