18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கிவிட்டது. முன்னதாக அமீர் TICKET TO FINALE டிக்கெட்டை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்த வார எலிமினேஷனுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் யார்? யார்? இருக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே சிபி நேற்று யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வழங்கிய 12 லட்ச ரூபாய் தொகையை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதிப் போட்டியின்போட்டியாளர்களில் ஒருவராக கட்டாயம் சிபி இருப்பார் என்றும் பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் பேசப்பட்டு வந்த நிலையில், சிபி திடீரென பிக்பாஸில் கொடுக்கப்பட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு வெளியில் வந்தது சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பலரும் சிபியின் இந்த முடிவை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சிபி முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் குறித்து முக்கிய பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 

என்ன ஒரு அற்புதமான பயணம் இது, இந்த பெருமைமிகு தளத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக விஜய் டிவி, பிக் பாஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கமல்ஹாசன் சார், ஒவ்வொரு வார இறுதியிலும் என்மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் பட்டிருக்கும் நன்றி கடனுக்கு எல்லையே இல்லை...     

இந்த வீட்டில் நான் இருந்த 95 நாட்கள் எப்போதும் என் நினைவில் நீங்காமல் இருக்கும்... இது போன்ற அருமையான ஹவுஸ்மேட்ஸ்களுடன் இருந்தது அற்புதமான அனுபவம், அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள் தான்!       

எனக்காக வாக்களித்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் உங்களது பதிவுகள், ட்வீட்டுகள் என உங்களது அன்பைப் பொழிந்துள்ளீர்கள்... நீங்கள் அளித்த உத்வேகம், சிறந்த எண்டர்டெயினர் ஆகவும் சிறந்த மனிதனாகவும் என்னை இருக்க வைத்தது...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி! .

என தெரிவித்துள்ளார். சிபியின் அந்தப் பதிவு இதோ…