லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளான நேற்று நயன்தாராவின் கனெக்ட் பட  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

விக்னேஷ் சிவன் & நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னதாக நயன்தாரா நடித்த ஹாரர் படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக வெளிவர உள்ள கனெக்ட் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்தியராஜ் மற்றும் அனுபம் கேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் முன்னோட்டமாக கனெக்ட்-The First Call எனும் மிரட்டலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.