சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் கள்ளக் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளான்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எல்லாம் வட மாநிலங்களைப் போலவே, சமீப காலமாக தமிழகத்திலும் நடைபெற தொடங்கி உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் பாலியல் தொல்லை என்பது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தான் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. 

சிறுமிகள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதாலும், அவர்களை எளிதில் அடைந்து விடலாம் என்பதாலும் பலர் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பது வேதனையும் கொடுமையான விசயமாக இருக்கிறது. 

அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. 

இதில், என்ன கொடுமை என்றால்? இந்த சம்பவத்திற்கு சிறுமிகளின் தாய் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம். இது தான் இருப்பதிலேயே உச்சக்கட்ட அதிர்ச்சியாகவும், வேதனையான விசயமாகவும் இருக்கிறது.

அதாவது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் தான் கூலித்தொழிலாளியான தங்கவேல். 53 வயதாகும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கும் பல நாட்களாக கள்ளக் காதல் உறவு இருந்து வந்து உள்ளது.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் தினமும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். 

இந்த சந்தர்ப்பத்தில் அவ்வபோது, தாயின் கள்ளக் காதலன் தங்கவேலு, கள்ளக் காதலியின் மகள்களான சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்து வந்து உள்ளார். 

இதனால், என்ன செய்வது என்று தெரியாத சிறுமிகள் தனது தாயும், தங்கவேலுவும் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்து இருக்கிறார்கள். 

இந்த விசயம், அந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சவுடேஸ்வரியின் கவனத்திற்கு சென்று உள்ளது. உடனடியாக, இது தொடர்பாக நேரில் சென்று அந்த அதிகாரி விசாரித்து உள்ளார். 

அப்போது, தங்கவேலு 2 சிறுமிகளையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது அம்பலமானது. 

இதனையடுத்து, உடனடியாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தங்கவேலுவை போக்சோ சட்டத்தில் கீழ் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.