பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நண்பனின் பிறந்தநாளை நண்பர்கள் சேர்ந்து இறந்த நாளாக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால் புத்தாடை அணிந்து பெற்றோர்களிடம் ஆசி பெற்று கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இது தவிர, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சாக்லேட் வழங்கி குழந்தைகள் தங்களது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், இன்றைய கால இளைஞர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பார்த்தாலே மனசெல்லாம் பதறுகிறது. அந்த அளவுக்கு தான் இளைஞர்களின் பிளந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் அமைந்திருக்கிறது. 

பர்த்டே செலிபிரேசன் என்று கூறி முட்டை தக்காளி அழுகிய காய்கறிகள் என அனைத்தையும் பிறந்தநாள் கொண்டாடும் நபர் மீது சக நண்பர்கள் வீசுவது அடிக்கடி வாடிக்கையாக நடக்கும் சம்பவங்களமாக மாறிபோய் இருக்கின்றன. 

இது தவிர, கேக் வெட்டி அதை சாப்பிடாமல் அப்படியே முகத்தில் அடித்து ஏன் பிறந்தோம் என வருந்தும் அளவிற்கு செய்து விடும் நண்பர்கள் கூட்டமும் பல ஊர்களிலும் இருக்கவே செய்கிறார்கள். இது தான், இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நாகரிகமாக இருக்கிறது.

அப்படியான ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான், நண்பர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை கொலையே செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், அவர்கள் தெரியாமல் செய்திருந்தாலும், இதுவும் ஒரு கொலைக்கு ஈடான சம்பவம் தான். 

ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. அதுவும், ஆசையாக பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர், அகால மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. 

தற்போது இணையத்தில் பரவும் அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் அனைவரும் சாலையின் நடுவே வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக, நண்பன் கேக்கை வெட்டியதும், அதை முகத்தில் பூசி அவனை அலேக்காக தூக்கி அனைவரும் அடித்து உதைக்கின்றனர். 

கேக்கில் அவன் முகத்தை அழுத்தியதால் கீரீம் அவன் நாசியில் ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அந்த பிறந்த நாளுக்கான நண்பன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிர் விட்டு இறக்கிறான்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவனை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். 

ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு  செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாளே இறந்தநாளாக அமைந்த சோகம் மிகவும் மோசமானது. இனி இது போன்ற ஆபத்தான கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக திகழ்கிறது. தற்போது, இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.