தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவரது டாக்டர் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவரது அயலான்,டான் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.

இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.அடுத்ததாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்,விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட முக்கிய படங்களில் பாடல் எழுதுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது புதிய படங்களின் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிரும் சிவகார்த்திகேயன் அவ்வப்போது சமூகஅக்கரை கொண்ட சில பதிவுகளையும் ஷேர் செய்வார்.தற்போது இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ரசிகர்களை பெற்று தமிழில் அதிகம் பின்தொடரப்பட்ட மூன்றாவது நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.