விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்த முகென் ராவ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடியுள்ளார். 

முன்னதாக இயக்குனர் கவின் இயக்கத்தில், ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமானார். விரைவில் வேலன் திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் தனது அடுத்த திரைப்படத்தை தொடங்கினார் முகேன் ராவ்.

அடுத்ததாக ஷீரடி  ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜீவி பிரகாஷின் பேச்சுலர் படத்தின் கதாநாயகி திவ்யபாரதி நடித்துள்ளார். மேலும் சாக்ஷி அகர்வால் & KPY பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மதில் மேல் காதல் திரைப்படத்திற்கு கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் முகெனின் மதில் மேல் காதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அசத்தலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.