தாய் ஒருவர் தனது 17 வயது மகளை, தன்னுடைய கள்ளக் காதலன் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 40 வயதான பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த பெண்ணிற்குக் கணவன் மற்றும் 17 வயதில் ஒரு டீனேஜ் மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் தற்போது படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் அந்த 40 வயதான பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழத் தொடங்கினார்.

கணவன் - மனைவியின் இந்த பிரிவில், தந்தையுடன் மகன் சென்ற நிலையில், தாயுடன் அவரின் 17 வயது டீனேஜ் மகள் தங்கி விட்டார். 

இதனையடுத்து, அந்த 40 வயது பெண், தனது 17 வயதில் டீனேஜ் மகளுடன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 52 வயதான ஒருவருடன் அந்த 40 வயதான பெண்ணிற்கு அறிமுகம் ஏற்பட்டு, இந்த அறிமுகம் பின் நாளில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், 17 வயது மகள் பள்ளிக்கூடம் சென்றதும், அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த 52 வயதான கள்ளக் காதலன் அடிக்கடி வந்து சென்று உள்ளார். அதன் படி, கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக, அந்த கள்ளக் காதலன், கடந்த சில ஆண்டுகளாக அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து, ஜாலியாக உல்லாசம் அனுபவித்து விட்டுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 

அப்போது, அந்த கள்ளக் காதலன் அந்த வீட்டிலிருக்கும் தனது காதலியின் 17 வயதான பெண்ணின் மீது சபலப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து, ஒரு கட்டத்தில் தனது ஆசையை, தன்னுடைய கள்ளக் காதலியிடம் அந்த காதலன் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த 40 வயதான பெண், தனது 17 வயது மகளிடம் தனது கள்ளக் காதலனின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். 

அதன்படி, தனது காதலனை போன் செய்து வர சொல்லி விட்டு, தனது மகளை அவருடன் இருக்கச் சொல்லிவிட்டு இந்த பெண் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

அதன்படி, அங்கு வந்த 52 வயதான அந்த கள்ளக் காதலன், அந்த 17 வயது பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இப்படியாக, அந்த 17 வயது பெண்ணை, கடந்த 2020 ஆம் ஆண்டு இருமுறை அந்த 52 வயதான தாயின் கள்ளக் காதலன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த குற்றத்தை மறைக்கும் விதமாக, தனது மகளை அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு இளைஞருக்குத் திருமணம் செய்து கொடுக்க அந்த தயார் முயன்று உள்ளார். 

ஆனால், அந்த பெண்ணின் கள்ளக் காதலன், மீண்டும் மீண்டும் கள்ளக் காதலியின் மகளைக் கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். இப்படியாக, அந்த கள்ளக் காதலன் அடிக்கடி தொல்லை கொடுக்கவே இனியும் பொறுக்க முடியாது என்று பொங்கி எழுந்த அந்த 17 வயது பெண், அங்குள்ள சைல்ட் ஹெல்ப்லைனுக்கு போன் செய்து, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த தாயையும் அவரின் கள்ளக் காதலனையும் அதிரடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.