15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்! திருமண ஆசை காட்டிய 17 வயது சிறுவன் வெறிச்செயல்..

15 வயது பள்ளி மாணவிக்கு திருமண ஆசை காட்டிய 17 வயது சிறுவன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவர் கர்ப்பமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பாகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வீட்டில் வசித்து வருகிறார். 

தற்போது, கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமியும் பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் இருந்து வந்தார். 

இந்த சூழலில், சிறுமியின் பெற்றோர் பகல் நேரத்தில் அன்றாடம் வேலைக்கு சென்றுவிட்டு, தினமும் இரவு நேரத்தில் தான் வீடு திரும்புவது வழக்கம்.

இதன் காரணமாக, பகல் முழுவதும் அந்த சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுவன் உடன், அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

அந்த சிறுவனின் காதல் வலையில் அந்த சிறுமி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சிறுவர் சிறுமியர் இருவரும் இந்த சின்ன வயத்தில் தங்களது காதலை வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், காதலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே, அந்த சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த  சிறுமியை அந்த 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

இதனையடுத்து, அடுத்த சில மாதங்களில் அந்த சிறுமி கர்ப்பமாக்கி உள்ளார். இதனால், சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், இது பற்றி தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் அவர் பயந்து இருந்து உள்ளார்.

இந்த சூழலில் தான், நேற்று முன் தினம் அந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, அந்த சிறுமியை  அவரது பெற்றோர் அருகில் உள்ள வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், “சிறுமி கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் சென்று விசாரித்து உள்ளனர். ஆனால், அவர் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

அப்போது, மருத்துவமனை சார்பில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, சிறுமியிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, சிறுமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுவனுக்கும் உள்ள காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட இந்த பழக்கத்தில் சிறுமியை “திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி” அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.