கன்னடத்தில் பிரபல நடிகையாக அசத்தி பலரது மனதில் இடம்பிடித்தவர் நிஷ்மா செங்கப்பா.சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் நிஷ்மா செங்கப்பா.ஜீ தமிழில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் தொடரில் நடித்து அசத்தியிருந்தார் நிஷ்மா செங்கப்பா.

இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு தமிழிலும் ரசிகர்கள் கிடைத்தனர்.இந்த சீரியல் நிறைவடைந்த பின் தெலுங்கில் சாவித்ரி என்ற தொடரில் நடித்து அசத்தினார் நிஷ்மா செங்கப்பா.இவர் மீண்டும் தமிழில் எப்போது நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள தெய்வம் தந்த பூவே என்ற தொடரில் நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.அவளும் நானும்,உயிரே உள்ளிட்ட தொடர்களில் நடித்த அம்ருத்க்கலாம் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த தொடர் வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது என்ற அறிவிப்பை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்.இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்