வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ வீடியோ இதோ !
By Aravind Selvam | Galatta | December 01, 2021 19:17 PM IST

தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் நடித்துள்ளார் அஜித்.
இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளது.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் இரண்டாவது பாடலான அம்மா செண்டிமெண்ட் பாடலின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுத சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார்.இந்த பாடல் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்