தாயோடு கள்ளத் தொடர்பில் இருந்துகொண்டே, அவரது மகளை கள்ளக் காதலன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை சரவணம்பட்டி அருகே  கணவனை பிரிந்த 40 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த 14 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதான முத்துக்குமார் என்ற இளைஞர்,  44 வயது நபர் வசித்து வந்தார்.

இப்படியான சூழலில் தான், முத்துகுமாருக்கும் கணவனை பிரிந்து 14 வயது மகளுடன் தனியாக வாழும் அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியாக, இருவரும் நெருங்கி நெருக்கமாக வாழ்ந்து வந்த நிலையில், கள்ளக் காதலன் முத்துக்குமாரிடம் அந்த பெண், புதிய தங்க நகைகள் வாங்க 2.5 சவரன் எடையுள்ள பழைய தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்திருக்கிறார்.

ஆனால், இதனைப் பெற்றுக்கொண்ட முத்துக்குமார், புதிய தங்க நகை வாங்காமல் அந்த நகை பணத்தையெல்லாம் செலவு செய்து விட்டார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த கள்ளக் காதலி, தனது காதலனிடம் “மீண்டும் நகைகளையும் பணத்தையும் கொடுக்குமாறு” கேட்டிருக்கிறார்.

இதனால், காதலன் முத்துக்குமார், “உனது 14 வயது மகளை என் வீட்டிற்கு வந்து பெற்றுக்கொள்ள சொல்” என்று போனில் கூறியிருக்கிறார்.

அவரின் பேச்சை நம்பி, அந்த பெண்ணும், நகைகளை வாங்கி வரச்சொல்லி தனது 14 வயது மகளை காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அப்போது, அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த முத்துகுமார், அவரை கொலை செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, உயிரிழந்த அந்த சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அங்குள்ள ஒரு புதரில் வீசி உள்ளார்.

இதனையடுத்து, தனது மகளை காணாத அந்த பெண், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக வசிாரணை மேற்கொண்டு வந்தனர். 

அப்போது, அந்த பெண்ணின் மகள் உயிரிழந்த சடலத்தை கண்டு பிடித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், கள்ளக் காதலன் முத்துக்குமார், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை அதிரடியாக கைது செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.