தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகரான அதர்வா முரளி அடுத்ததாக டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் கூர்க்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் TRIGGER. சமீபத்தில் வெளியான TRIGGER பட டைட்டில் டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக அதர்வா நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் ப்ரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவரும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.   

இந்த வரிசையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி படத்தின் ரீமேக்காக, இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தள்ளிப்போகாதே. மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தள்ளிப்போகாதே படத்தை தயாரித்துள்ளது. 

தள்ளிப்போகாதே திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.N.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே தள்ளிப்போகதே பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் தள்ளிப்போகாதே படம் ரிலீஸாகிறது. ஆனால் அதே நாளில் ரிலீசாக இருந்த குருதி ஆட்டம் திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.