தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் பிரபல நடிகராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் உருவாகும் ஏஞ்சல் மற்றும் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படம் என அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் நடிகர், இயக்குனர் & பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , கனா படத்திற்கு பிறகு இயக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் உதயநிதி. தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் நெஞ்சுக்கு நீதி படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விரைவில் ரிலீசாக உள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியானது. அந்த புகைப்படங்கள் இதோ…