தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனரான செல்வராகவன் நடிகராக அறிமுகமான சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி.RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ள ராக்கி வருகிற டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது

வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள, ராக்கி திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 

அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள ராக்கி திரைப்படத்தின் ரிலீசுக்காக நீண்டகாலமாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ராக்கி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.

தொடர்ந்து ராக்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட, சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் ராக்கி படத்தின் திரையரங்க ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது. இந்நிலையில் ராக்கி படத்தின் மிரட்டலான புதிய ட்ரைய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான அந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.