தமிழ் திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 மற்றும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் மலையாளத்தில் 19(1)(a) , பாலிவுட்டில் மாநகரம் படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைக்கர் மற்றும் ஃபேம்லி மேன் சீரிஸ் இயக்குனர்களின் புதிய ஹிந்தி வெப்சீரிஸ் ஆகியவை தயாராகி வருகின்றன.

மேலும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட் வீடியோ தற்போது வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடையாளமே தெரியாத அளவுக்கு மிரட்டலான கெட்டப்பில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதியின் போட்டோ ஷூட் வீடியோ இதோ…