தமிழக மக்கள் மழை காலங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வலியுறுத்தல்.

tamilisaiதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்ககடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மற்றும் பெரும்பாலான பகுதிகளிலும்  மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு ஏற்படவிருப்பதாகவும், அது வலுப்பெற்று தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது  தொடர் மழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மக்களிடம் மழை வெள்ள அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசுத் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார். இதனால் 2015 போன்ற சூழல் ஏற்பட்டாலும் கூட அரசு எப்படியும் அதை சமாளித்து விடும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை காலங்களில் நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மேலும் என் தொடர்புடையவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த சூழ்நிலையில் மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.