பரபரப்பாக நடைபெற்று வரும் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னப்பொண்ணு, அபிஷேக் ராஜா மற்றும் சுருதி ஆகியோர் இதுவரை எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டின் கேப்டன் தேர்வு மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் இன்று நடைபெறுகிறது.

அந்த வகையில் நடைபெறும் பொம்மலாட்டம் என்னும் கேப்டன்சி டாஸ்க்கில் கடந்த வாரம் செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணியின் 7 பேரும் நேரடியாக போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களின் புகைப்படத்துடன் கூடிய மண் பானை தலைகொண்ட பொம்மை வைக்கப்பட்டுள்ளது. 

இதில் யார் கேப்டனாக வரவேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்களது பானை உடைக்கப்படுகிறது. முன்னதாக இன்று வெளிவந்த ப்ரோமோ வீடியோக்களில் அக்ஷராவின் பானையை சிபி உடைப்பதும், நிரூப்பின் பானையை ராஜூ ஜெயமோகன் உடைப்பதும் தொடர்ந்து நிரூப்புடன் பிரியங்கா மற்றும் அபினய் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என தெரிகிறது.

இந்நிலையில் சற்று முன் வெளியான புதிய ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. இதில் அனேகமான ஹவுஸ்மேட்ஸ்கள் ராஜு ஜெயமோகனை நாமினேட் செய்கிறார்கள். மேலும் சிலர் பிரியங்காவை நாமினேட்  செய்கிறார்கள். இந்த நாமினேஷன் ப்ராசஸ் ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.