வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது இதுவரை நமீதா மாரிமுத்து,நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு ஆகியோர் வாரம் ஒருவராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து கடந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து சுருதி நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் 5-வதாக எலிமினேட் செய்யப்பட்டார். சிறப்பாக, தைரியமாக விளையாடி வந்த சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நடைபெற்ற செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணியில் இருந்த 7 பேரும் இந்த வார கேப்டன் போட்டிக்கு நேரடியாக தேர்வானார்கள். அதன்படி பொம்மலாட்டம் டாஸ்க் மூலமாக இந்த வார கேப்டனை தேர்வு செய்யும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

இதில் பாவனி வருண், பிரியங்கா, அக்ஷ்ரா, அபிநய், நீருப் ஆகியோரது புகைப்படங்கள் இருக்கும் பொம்மைகளும் அதன் தலையாக மண்பானையும் வைக்கப்பட்டுள்ளது. இதில் யார் கேப்டனாக வரக்கூடாது என நினைக்கிறார்களோ அவர்களது பானையை உடைக்கும் இந்த டாஸ்க்கில் சிபி, அக்ஷ்ராவின் பானையை உடைக்கும் புரோமோ சற்று முன்பு வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.