விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த முறையும் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 5 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் நமிதா மாரிமுத்து,நாடியா சாங்,அபிஷேக் ராஜா,சின்னப்பொண்ணு மற்றும் சுருதி ஆகியோர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இந்த வாரத்திற்கான கேப்டன் யார் எனத் தீர்மானிக்கும் பொம்மலாட்டம் டாஸ்க் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணியை சேர்ந்த போட்டியாளர்கள் இந்தவார கேப்டன்சி டாஸ்க்கில் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

இந்த டாஸ்க்கில் போட்டியிடும் நபர்களின் புகைப்படத்துடன் கூடிய மண்பானை தலைகொண்ட பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து யார் கேப்டனாக வரக்கூடாது என நினைக்கிறார்களோ அவர்களது பானையை உடைக்க வேண்டும். அதன்படி முன்னதாக சிபி அக்ஷ்ராவின் பானையை உடைக்கும் இன்றைய (நவம்பர் 8) நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ காலை வெளியானது.

தொடர்ந்து இன்றைய (நவம்பர் 8) நிகழ்ச்சியில் நீரூப்பின் பானை ராஜு ஜெயமோகன் உழைக்கிறார். பின்னர் நிரூப்புடன் பிரியங்கா மற்றும் அபிநய் வாக்குவாதத்தில் ஈடுபடும் காரசாரமான ப்ரோமோ வெளியானது. கேப்டன்சி டாஸ்க்கின் அனல் பறக்கும் புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.