திருமணமான சில மாதங்களில் புது மாப்பிள்ளையான பால்ராசு பல பெண்களுடன் பழகி திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக இருந்து ஏமாற்றியதாக அதிர்ச்சி அளிக்கும் புகார்கள் எழுந்து உள்ளன.

தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகனின் மகள் 22 வயதான பூவழகி என்ற பெண்ணுக்கும்,  குன்னம் தாலுகாவில் உள்ள பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்த பரமசிவத்தின் மகன் பால்ராசுவுக்கும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. 

அத்துடன், திருமணமான அடுத்த சில மாதங்களில் கணவன் பால்ராசு பல பெண்களுடன் பழகி, திருமணம் செய்துக்கொண்டு உல்லாசமாக குடும்பம் நடத்தியதும், அவரது மனைவி 22 வயதான பூவழகிற்கு தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த 22 வயதான புது பெண் பூவழகி, தனது கணவனிடம் இது குறித்து நியாயம் கேட்டிருக்கிறார்.

இதனால், கணவன் - மனைவிக்கு இடையே கடும் சண்டை வந்திருக்கிறது.

அப்போது, இன்னும் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று, கேட்டு அவர் தனது மனைவியை அடித்து உதைத்து தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து, மனைவி பூவளிகியை அவரது வீட்டிற்கு விரட்டி அடித்திருக்கிறார் என்றம் கூறப்படுகிறது.

இதனால், தனது வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்ட பூவழகி, அம்மா வீட்டிற்கு சென்ற பிறகு, கணவன் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, பூவழகி அவரது அம்மா வீட்டில் இருந்து வந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அனைத்து மகளிர் போலீசார் அங்கு வந்து, “உனது கணவர் எங்கே?” என்று, விசாரித்து உள்ளார்.

அதற்கு அந்த பெண் ”ஏன்?” என்று, கேட்டதற்கு போலீசார், “உன்னுடைய கணவர் ஒரு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்ததாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளதால், அவரை கைது செய்ய தேடி வருகிறோம்” என்றும், கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பூவழகி, போலீசாரிடம் மேலும் விசாரித்து இருக்கிறார்.

மேலும், “சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னிடம் பேசி பால்ராசுவுக்கும் எனக்கும் திருமணமாகி நான் இப்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளேன்” என தெரிவித்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பூவழகி தெரிவித்து உள்ளார். 

ஆகையால், “என்னையும், பல பெண்களையும் ஏமாற்றிய கணவன் பால்ராசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, போலீசாரிடம் கூறியிருந்தார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கல்யாண மன்னன் பால்ராசுவை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.