காதலித்து ஏமாற்றிய காதலனை போலீசாரின் உதவியோடு, காவல் நிலையத்தில் வைத்து காதலி கரம் பிடித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்து உள்ள புதுவேட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான கோபாலகிருஷ்ணன், பி.டெக் படித்துவிட்டு, சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்தார். அத்துடன், அந்த பகுதியில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தில் அவருக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்ட நிலையில், அவர் அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தார்.

அதே போல், இதே நிறுவனத்தில் சென்னை கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அந்தோனிசலேரி என்ற இளம் பெண்ணும் பணியாற்றி வந்தார். 

இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால், தினமும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டு, இருவரம் நண்பர்களாக அறிமுகம் ஆனார்கள். இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதனால், அவர்கள் இருவரம் கடந்த மூனரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் காலத்தில், அவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு காதலர்களாக சேர்ந்து ஊர் சுற்றி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார்கள். 

குறிப்பாக, நிறுவனத்தின் விடுமுறை நாட்களில் காதலர்கள் இருவரும் கணவன் - மனைவி போல் மிகவும் போல், மிகவும் நெருக்கமாக ஊர் சுற்றி, ஒரு காதல் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், காதலன் கோபாலகிருஷ்ணன், அந்தோனிசலேரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், அப்படி செல்லும் போதெல்லாம் “நாம் விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆசை வார்த்தைகள் கூறி, அந்த இளம் பெண்ணிடம் தொடர்ந்து, உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றுடன், காதலியின் குடும்பத்தினரிடமும் அவர் நன்றாக பழகி வந்திருக்கிறார். 

இப்படியாக, இவர்களது காதல் வாழ்க்கை எந்த தடங்களும் இல்லாமல் சுமுகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், “நான் ஊருக்கு சென்று விட்டு வருவதாக” தனது காதலியிடம் கூறிவிட்டு சென்ற கோபாலகிருஷ்ணன், பல மாதங்கள் ஆகியும் கேளம்பாக்கம் திரும்பவில்லை. 

இதனால், காதலன் மீது சந்தேகம் அடைந்த காதலி அந்தோனிசலேரி, அவரது செல்போனை எண்ணை தொடர்பு கொண்ட நிலையில், அதுவும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 

மேலும், காதலன் கோபாலகிருஷ்ணனுக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயம் ஆகி, வரும் 25 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த தகவலும், காதலி அந்தோனிசலேத்துக்கு தெரிய வந்தது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த காதலி, “என்னை ஆசை வார்த்தை கூறி என்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய காதலன் கோபாலகிருஷ்ணன் முயல்வதாக” அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார், கோபாலகிருஷ்ணன் இருக்கும் இடத்தை செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து மாமல்லபுரம் மகளிர் போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த இடத்திற்கு மப்டி உடையில் கள்ளக்குறிச்சி சென்ற போலீசார், அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து மாமல்லபுரம் அழைத்து வந்தனர். காவல் நிலையம் வந்ததும், அவரிடம் விசாரணை நடத்தியதில், “என்னால் ஏமாற்றப்பட்ட இளம் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று, அவர் மனம் மாறி ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, இருவரது பெற்றோரையும் காவல் நிலையம் வரவழைத்து, மகளிர் போலீசார் முன்னிலையில் கோபாலகிருஷ்ணன் - அந்தோனி சலேரி இருவருக்கும், போலீசார் காவல் நிலையத்தில் வைத்தே திருமணம் செய்து வைத்தனர். அதன் படி, காதல் ஜோடிகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, இந்த புதிய காதல் ஜோடியை, காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.