மக்களின் மனம் கவர்ந்த தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அசோக் செல்வன், தமிழ் மட்டும்ல்லாது மலையாளத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி சமீபத்தில் ரிலீஸான மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்மம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழில் கடைசியாக  நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாரான நின்னிலா நின்னிலா (தமிழில் தீனி) திரைப்படமும் கவனத்தை ஈர்த்தது. 

இதனிடையே இயக்குனர் விஷால் வெங்கட் எழுதி இயக்கத்தில், நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து அபிஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரேயா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா குமார், பானுப்பிரியா மற்றும் இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா இணைந்து தயாரிக்க டிரைடன்ட் ஆர்ட் நிறுவனம் வழங்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விரைவில் ரிலீசாக உள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…