அன்றும், இன்றும், என்றும் மக்களின் சூப்பர் ஸ்டாராக, இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரமாக, பலகோடி தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடந்து முடிந்த 67 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றார்.

முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளிவந்து குடும்பங்கள் கொண்டாட சூப்பர் ஹிட்டானது. கிட்டதட்ட 43 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரும் ஆளுமையாக வலம் வருகிறார் ரஜினிகாந்த்.

Black & White, Eastman Colors, color,3d, motion capture அனைத்து வகை திரைப்படங்களிலும் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் 70 வயதை கடந்தும் இன்னும் கதாநாயகனாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று தனது 72-வது பிறந்த நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாடினார்.

உலகம் முழுக்க இருக்கும் பலகோடி ரசிகர்களும் ஒட்டுமொத்த திரையுலகமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை குடும்பத்தினரோடு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். சூப்பர் ஸ்டாரின் 72வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ...